இயற்கைப் பேரிடரின்போது ஹிமாசல பிரதேசத்தை ராகுல் காந்தியும் அவரது சகோதரி பிரியங்கா காந்தியும் கண்டுகொள்ளவில்லை என பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா குற்றம்சாட்டினார்.
ஹிமாசல பிரதேச மாநிலம் சிம்லா நான்காரி பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்ட அவர், கடந்த ஆண்டு ஹிமாசல பிரதேசம் இயற்கைப் பேரிடரை எதிர்கொண்டபோது தான் மூன்று முறை வந்ததாகவும், மத்திய அரசு 3,200 கோடி ரூபாய் நிவாரணம் வழங்கியதையும் நினைவுகூர்ந்தார்.
காங்கிரஸ் ஆளும் ஹிமாசல பிரதேச மாநில அரசு நீண்ட நாட்களுக்கு நீடிக்காது என்று கூறிய ஜெ.பி. நட்டா, பேரிடரின்போது இங்கு வராத ராகுல் காந்தியும், பிரியங்கா காந்தியும் இப்போது தேர்தல் பிரசாரத்துக்கு மட்டும் வருவதாக குற்றம்சாட்டினார்.