ஆஸ்திரேலியாவில் 30 ஆண்டுகளாகியும் கெட்டுப் போகாத பர்கர் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆஸ்திரேலியாவை சேர்ந்த இருவர் கடந்த 1995-ஆம் ஆண்டு பிரபல ஃபாஸ்ட் ஃபுட் கடையில் பர்கர் வாங்கி, அதை அப்படியே வைத்திருந்தால் என்னவாகும் என்று சிந்தித்தனர்.
அதன்படி, அந்த பர்கரை ஒரு டப்பாவில் வைத்து மூடி 30 ஆண்டுகள் கழித்து, திறந்து பார்த்தபோது அவர்களுக்கு ஆச்சரியம் காத்திருந்தது.
அந்த பர்கர் வைத்த மாதிரியே இருந்தது. கெட்டுப் போன வாசனை கூட வீசவில்லை. இதை சமூக வலைதளத்தில் பகிர்ந்த அவர்கள், அமெரிக்காவில் பில் கிளிண்டன் அதிபராக இருந்தபோது வாங்கிய பர்கர், ஜோ பைடன் அதிபராகும் வரை கெட்டுப்போகவில்லை என நகைச்சுவையாக பதிவிட்டுள்ளனர்.