ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கின் அங்க அசைவுகளைக் கூட முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி வி.கே.பாண்டியன் கட்டுப்படுத்துவதாக அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்த விஸ்வ சர்மா விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பான வீடியோ பதிவை எக்ஸ் வலைதளத்தில் பகிர்ந்த அவர், நவீன் பட்நாயக்கின் கை அசைவைக் கூட வி.கே.பாண்டியன் தான் கட்டுப்படுத்துவதாகவும், தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி, ஒடிசாவின் எதிர்காலத்தை தீர்மானிப்பது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது என்றும் ஹிமந்த விஸ்வ சர்மா தெரிவித்துள்ளார்.