டெல்லி மதுபான கொள்கை விவகாரத்தில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட கூடுதல் குற்றப் பத்திரிகை மீது ஜூன் 4-ஆம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும் என டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இந்த வழக்கில் அமலாக்கத் துறை தரப்பில் அண்மையில் கூடுதல் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இதனை பரிசீலித்த நீதிபதி, ஜூன் 4-ஆம் தேதி தீர்ப்பளிப்பதாகக் கூறி, வழக்கை ஒத்திவைத்தார்.