பிரான்ஸிடமிருந்து 50,000 கோடி ரூபாய் மதிப்பில் 26 ரஃபேல் போர் விமானங்களை இந்தியா வாங்குவதற்கான பேச்சுவார்த்தை மே 30-ஆம் தேதி தொடங்குகிறது.
இதையொட்டி, ரஃபேல் போர் விமான தயாரிப்பு நிறுவனமான டசால்ட் ஏவியேஷன் மற்றும் தேல்ஸ் நிறுவன அதிகாரிகளைக் கொண்ட உயர்நிலைக் குழு டெல்லி வருகிறது.
அவர்களை மத்திய பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சந்தித்து ஆலோசனை நடத்துகின்றனர். அநேகமாக இந்த நிதியாண்டுக்குள் ரஃபேல் ஒப்பந்தம் கையொப்பமாகிவிடும் என பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.