ரெமல் புயலால் பாதிக்கப்பட்ட மிசோரமிற்கு மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து 15 கோடி ரூபாய் ஒதுக்கி அம்மாநில முதலமைச்சர் லால்துஹோமா அறிவித்துள்ளார்.
மிசோரமில் கனமழையால் கல்குவாரி இடிந்தும், நிலச்சரிவில் சிக்கியும் 27 பேர் உயிருடன் மண்ணில் புதைந்து இறந்துள்ளனர்.
மேற்குவங்கம், வங்கதேசம் இடையே ரெமல் புயல் கரையை கடந்தபோது அண்டை மாநிலமான மிசோரமில் கனமழை கொட்டித் தீர்த்தது.
அய்ஸ்வால் பகுதியில் பெய்த கனமழை வெள்ளத்தில் ஒரு கட்டடம் அடித்துச் செல்லப்பட்டது. அதிலிருந்து மாயமான 3 பேரை மீட்புக்குழுவினர் தேடி வருகின்றனர்.
இதனிடையே, பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட முதலமைச்சர் லால்துஹோமா, ரெமல் புயல் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மிசோரமிற்கு மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து 15 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.
மேலும், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா 4 லட்சம் ரூபாய் கருணை தொகையும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணமும் வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.