புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி நாமபுரீஸ்வரர் கோயிலில் நடைபெற்ற அக்னி நட்சத்திர நிவர்த்தியில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
தமிழகத்தில் கடந்த மே 4-ம் தேதி தொடங்கிய அக்னி நட்சத்திரத்தால் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகி வந்தனர்.
இந்நிலையில் அக்னி நட்சத்திரம் நிறைவு பெற்றதையொட்டி, ஆலங்குடியில் உள்ள பழமை வாய்ந்த தர்மஸம்வர்த்தினி சமேத நாமபுரீஸ்வரர் கோயிலில் மூலவருக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. அதன்படி மழை பெய்து வேளாண்மை செழிக்க வேண்டி நாமபுரீஸ்வரருக்கு 108 இளநீரால் அபிஷேகம் செய்யப்பட்டது.