வேலூரில் பாதாள சாக்கடை பணியை விரைந்து முடிக்கக் கோரி வியாபாரிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
வேலூர் புதிய மீன் மார்கெட் முதல் நேஷனல் திரையரங்கம் வரையிலான பழைய பைபாஸ் சாலையில் பல்வேறு கடைகள் இயங்கி வருகின்றன.
இங்கு கடந்த 2 மாதங்களுக்கு முன் பாதாள சாக்கடை அமைப்பதற்காக சாலையின் ஒரு பகுதி மூடப்பட்டது. இதன் காரணமாக போக்குவரத்து நெரிசல் அதிகரித்ததுடன், வியாபாரமும் பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த சுமார் 30-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.