திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே முருகன் கோயிலில் பூஜை முடியும் வரை முருகனை மயில் தரிசித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
வடமலைபாளையம் கிராமத்தில், வைகாசி விசாகத்தன்று முருகன் கோயிலில் உச்சிக்கால பூஜை நடைபெற்றது.
அப்போது அங்கு வந்த மயில் ஒன்று, பூஜை முடியும் வரை கருவறையில் நுழைவு வாயிலில் நின்று முருகனை தரிசனம் செய்தது. இதனை பார்த்த பக்தர்கள் பரவசம் அடைந்தனர்.