கன்னியாகுமரி மாவட்டத்தின் மேற்கு கடலில் விசைப்படகுகளுக்கான மீன்பிடி தடைக்காலம் வரும் ஜூன் 1-ம் தேதி தொடங்குகிறது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் 2 பருவங்களாக மீன்பிடி தடைக்காலம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
அதன்படி ஒவ்வொரு ஆண்டும் கிழக்கு பகுதியான சின்னமுட்டத்தில் ஏப்ரல் 15-ம் தேதி முதல் ஜூன் 15-ம் தேதி வரையும், மேற்கு பகுதிகளான மணக்குடி உள்ளிட்ட இடங்களில் ஜூன் 1-ம் தேதி முதல் ஜூலை 31-ம் தேதி வரையும் மீன்பிடி தடைக்காலம் அமலில் இருக்கும்.
தடைக்காலத்தையொட்டி கரைகளில் நிறுத்தப்படும் படகுகளில் மீனவர்கள் பழுது பார்க்கும் பணிகளை மேற்கொள்வர் என்பது குறிப்பிடத்தக்கது.