நீலகிரி மாவட்டம், உதகை அருகே இரவு நேரங்களில் புலிகளின் நடமாட்டத்தின் காரணமாக பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
உதகை எச்.பி.எப் இந்து நகரில் இரவு நேரத்தில் புலி நடந்து செல்லும் காட்சிகளை, அப்பகுதி மக்கள் செல்போன்களில் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர்.
இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானதையடுத்து, புலியை கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விட வேண்டும் என வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.