திருச்சி அருகே மாரியம்மன் கோயில் திருவிழவையொட்டி, தீ சட்டி எடுத்தும், அலகு குத்தியும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
மணிகண்டம் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோயிலில், கடந்த வாரம் காப்பு கட்டுதலுடன் விழா தொடங்கியது. இந்நிலையில், கரகம் எடுத்தும், அலகு குத்தியும், தீ சட்டி எடுத்தும் பக்தர்கள் கோயிலை சுற்றி வலம் வந்தனர்.
மேலும் கரும்பு தொட்டிலை எடுத்து பக்தர்கள் வேண்டுதலை நிறைவேற்றினர். இதனையடுத்து முத்துமாரியம்மனுக்கு சிறப்பு பூஜைகளுடன் மஹா தீபாரதனை நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.