வேலூர் குடியாத்தம் அருகே சாலையில் குறுக்கே வந்த தெரு நாயால் இருவர் மீது, ஆட்டோ மோதி விபத்துக்குள்ளாகும் சிசிடிவி வெளியாகியுள்ளது.
குடியாத்தம் சந்தப்பேட்டை பஜார் பகுதியில் வீட்டின் அருகே சதீஷ், ராஜேஷ் ஆகியோர் பேசிக் கொண்டிருந்தனர் அப்போது சாலையில் எதிரே தெரு நாய் ஒன்று குறுக்கே வந்ததால், அதன் மீது மோதாமல் இருக்க ஆட்டோவை ஓட்டுநர் திருப்பியுள்ளார்.
இதில், நிலை தடுமாறி ஆட்டோ வீட்டின் அருகே பேசிக் கொண்டிருந்த இருவர் மீது மோதி விபத்துக்குள்ளானது.