காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் தீர்த்தவாரி உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
வைகாசி பிரம்மோற்சவ விழா, காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் கடந்த 20ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
உற்சவத்தின் 9-ம் நாளான நேற்று கோயில் குளத்தில் தீர்த்தவாரி நடைபெற்றது. கல்யாண மண்டபத்தில் ஸ்ரீதேவி, பூதேவி உடன் எழுந்தருளிய வரதராஜ பெருமாள், ஊர்வலமாகச் சென்று அத்திவரதர் குடி கொண்டுள்ள அனந்த சரஸ் குளத்தில் இறங்கினார்.
இதைத் தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் குளத்தில் இறங்கி புனித நீராடினார்.