ஹைதராபாத் நேரு உயிரியல் பூங்காவில் உள்ள ஆசிய யானையை ஓராண்டுக்கு தத்தெடுத்துள்ள ஆந்திர தம்பதிக்கு பாராட்டுகள் குவிகின்றன.
ஆந்திராவைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர்களான ஸ்ரீஹரி – ஸ்ரீஜா தம்பதியினர் நேரு உயிரியல் பூங்காவை பார்வையிட்டுள்ளனர்.
அப்போது, பூங்கா நிர்வாக இயக்குநரை சந்தித்து ஆசிய யானையை தத்தெடுப்பதற்கான விருப்பததை தெரிவித்துள்ளனர். தம்பதியை பாராட்டிய பூங்கா நிர்வாக, ஓராண்டுக்கு ஆசிய யானையை தத்தெடுப்பதற்கான ஆணையை வழங்கினார்.
இது குறித்து தம்பதி கூறுகையில், வன விலங்குகளைப் பாதுகாக்க விலங்கியல் பூங்காவுடன் கைகோர்க்க முன்வர வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர்.