இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் இடம்பெயர்ந்த பாலஸ்தீனியர்கள் 21 பேர் உயிரிழந்துள்ளனர்.
இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து பாலஸ்தீனிரியர்கள் மீது தாக்குதலை நடத்தி வரும் நிலையில் காசா மக்கள் ரஃபாவில் உள்ள சாலைகளிலும், தெரு ஓரங்களிலும் கூடாரங்கள் அமைத்து தங்கி வந்தனர்.
இந்நிலையில் இஸ்ரேல் ராணுவம் அவர்கள் மீது வான் வழி தாக்குதலை நடத்தியது, இதில் 21 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
60க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்நிலையில் உயிரிழந்தோரின் உடல்கள் மீட்கப்பட்டும், சேதமடைந்த பொருட்களை அப்புறப்படுத்தியும் வருவதாக காசா சுகாதார தலைமை அதிகாரி தெரிவித்தார்.