இங்கிலாந்து நாட்டில் ப்ரோக்வொர்த் பகுதியிலுள்ள கூப்பர்ஸ்ஹில்ஸ் மலையில் செங்குத்து ஓட்ட போட்டி நடைபெற்றது.
கூப்பர்ஹில்ஸ் பகுதி மலையில் ஆண்டும் தோறும் நடைபெறும் இவ்விழா இந்தாண்டும் சிறப்பாக நடத்தப்பட்டது.
இதில் 100-க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் பங்கேற்று தட்டு வடிவிலான பந்தை பிடிப்பதற்கு போட்டி போட்டு ஓடினர்.
இறுதியில் பந்தை கைப்பற்றிய வீரர் வெற்றியாளராக கருதப்படுவர், ஆண்கள், பெண்கள் என இரு பிரிவுகளாக நடைபெற்ற இப்போட்டியைக் காண ஆயிரகணக்கானோர் பங்கேற்றனர்.