குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதை முன்கூட்டியே எச்சரிக்கும் விதமாக அதிக ஒலி எழுப்பும் கருவி பொருத்தப்பட்டது.
பழைய குற்றால அருவியில் கடந்த 17ஆம் தேதி ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி 17 வயது சிறுவன் உயிரிழந்தார். இந்த சம்பவத்துக்கு பிறகு வனத்துறையினர் பல்வேறு பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில் மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்படவுள்ளதை முன்கூட்டியே எச்சரிக்கும் விதமாக அதிக ஒலி எழுப்பும் கருவி பொருத்தப்பட்டுள்ளது.