‘கல்கி 2898 கி.பி.’ படத்திற்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட எதிர்கால வாகனமான புஜ்ஜி சென்னை மஹேந்திரா சிட்டியில் மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டது.
இந்திய திரையுலகமே ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ‘கல்கி 2898 கி.பி’ படம் வரும் ஜூன் 27ஆம் தேதி திரைக்கு வருகிறது.
இந்த திரைப்படத்திற்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட புஜ்ஜி என்கிற எதிர்கால வாகனத்தை நடிகர் பிரபாஸ், ரசிகர்கள் முன்னிலையில் அறிமுகப்படுத்தினார்.
இதனையடுத்து சென்னை மஹேந்திரா சிட்டியில் வைக்கப்பட்டுள்ள இந்த வாகனத்தை பொதுமக்கள் வியப்புடன் கண்டு சென்றனர்.