400 இடங்களை கைப்பற்றி பிரதமர் மோடி தலைமையில் மீண்டும் பாஜக ஆட்சி அமையும் என்பது சாமானியர்களின் மந்திரமாகிவிட்டதாக உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்த பேட்டியில், கடந்த 10 ஆண்டுகளில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சியில் அனைத்து துறைகளிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
வரும் 4ஆம் தேதி பாஜக தலைமையிலான கூட்டணி 400 இடங்களை கைப்பற்றி மீண்டும் ஆட்சி அமைக்கும் என குறிப்பிட்டார்.