ஹெச்டிஎஃப்சி வங்கி வரும் 25-ம் தேதி முதல் 100 ரூபாய் வரையிலான யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு குறுஞ்செய்தி அனுப்புவதை நிறுத்தவுள்ளது.
இனி யுபிஐ மூலம் 100 ரூபாய்க்கு மேல் பணம் அனுப்பும் போதும், 500 ரூபாய்க்கு மேல் பணம் பெறும் போதும் மட்டுமே குறுஞ்செய்தி அனுப்பப்படும் என்றும் ஹெச்டிஎஃப்சி வங்கி தெரிவித்துள்ளது.
எனினும், அனைத்து யுபிஐ பரிவர்த்தனைகளுக்கும் மின்னஞ்சல் தொடர்ந்து அனுப்பப்படும் என்றும் ஹெச்டிஎஃப்சி வங்கி தெரிவித்துள்ளது.