திண்டுக்கல் மாவட்டம், பழனி முருகன் கோயிலில் செயல்பட்டு வரும் ரோப்கார் சேவை பராமரிப்பு பணி காரணமாக நாளை ஒரு நாள் ரத்து செய்யப்படுவதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர்.
பக்தர்கள் மலைக்கோவிலுக்கு சென்று சாமிதரிசனம் செய்ய ஏதுவாக ரோப்கார் வசதி உள்ளது.
இந்நிலையில், பராமரிப்பு பணி காரணமாக நாளை ரோப் கார் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக கோயில் நிர்வாகம் அறிவித்திருக்கிறது.