சேவா பாரதி தமிழ்நாடு அமைப்பின் சாா்பில் காஞ்சிபுரம் மற்றும் ஓசூர் அத்திப்பள்ளியில் இலவச சுயதொழில் பயிற்சி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், பஞ்சகார்யா என்ற திட்டத்தின் கீழ் கல்வி, மருத்துவம், சமுதாய நலன், சுய சாா்பு மற்றும் பேரிடா் மேலாண்மை ஆகிய 5 துறைகளின் கீழ், மக்களுக்கு பல்வேறு வகையான சேவைகளை சேவாபாரதி அமைப்பு செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் எல் அண்ட் டி நிறுவனத்துடன் மேற்கொண்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில், காஞ்சிபுரம் மற்றும் ஒசூரை அடுத்த அத்திப்பள்ளி ஆகிய இடங்களில் இலவச சுய தொழில் பயிற்சி அளிக்கபடவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
ஒன்றரை முதல் 3 மாத கால பயிற்சியின் போது தச்சு வேலை, சாரம் அமைக்கும் பணி, கம்பி வளைத்தல் உள்ளிட்டவை கற்றுத்தரப்படும் என்றும், பயிற்சி முடித்தபின் எல் அண்ட் டி நிறுவனத்தின் கட்டுமானப் பணி நடைபெறும் இடத்தில் வேலைவாய்ப்புக்கு ஏற்பாடு செய்யப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இலவச சீருடை, பாதுகாப்பு உபகரணங்கள், உணவு மற்றும் தங்குமிடம் இலவசம் என்றும், தேவைக்கேற்ப கணினி பயிற்சியும் கற்றுத் தரப்படும் என்றும் சேவாபாரதி சங்கம் தெரிவித்துள்ளது. எனவே 8 ஆம் வகுப்பு முதல் ஐடிஐ படித்தவர்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
முன்பதிவு செய்ய அணுகவும்: அலைபேசி 7305087892, sbtnitskillenablement@gmail.com என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.