ஆவின் மூலம் காலாவதியான பால் பொருட்களை விற்பனை செய்யும் திமுக அரசுக்கு முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆவின் நிறுவனத்தில் காலாவதியான பால் பொருட்கள் விற்பனை என்ற செய்தி பேரதிர்ச்சியை அளிக்கிறது என தெரிவித்துள்ளார்.
தனியார் நிறுவனங்களுக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டிய அரசு நிறுவனமே காலாவதியான பொருட்களை விற்பனை செய்வது வேலியே பயிரை மேற்வதற்கு சமம் என குறிப்பிட்டுள்ள அவர்,
காலாவதியான நிலையில் உள்ள பால் பொருட்களை வாங்க வேண்டும் என்று ஆவின் பாலகங்கள் கட்டாயப்படுத்துவதை ஏற்க முடியாது என கூறியுள்ளார்.
ஆவின் பாலகங்களில் காலாவதியான பொருட்கள் விற்பனை செய்யப்படாது என்ற உத்தரவாதத்தை அரசு வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ள அவர்,
ஆவின் பால் பொருட்கள் விவகாரத்தில் முதலமைச்சர் தனிக்கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.
















