சென்னையில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட ரூட் தல விவகாரத்தில் ஒருவரை அரிவாளால் வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கீழ்பாக்கத்தில் உள்ள பச்சையப்பன் கல்லூரியில், செமஸ்டர் தேர்வு எழுத மதுரவாயலை சேர்ந்த பிஏ மூன்றாம் ஆண்டு படித்து வரும் பீட்டர் வந்துள்ளார்.
அப்போது, ரூட் தல விவகாரத்தில் மாணவர் பீட்டரை அரிவாளால் வெட்டிவிட்டு அதே கல்லூரியை சேர்ந்த மாணவர் தப்பியோடி இருக்கிறார்.
காயமடைந்த மாணவர் சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நிலையில், கல்லூரி நிர்வாகம் சார்பில் காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
கல்லூரி திறப்பதற்கு முன்னரே ரூட் தல விவகாரம் தலைத்தூக்கி உள்ளதால், புதிதாக சேரும் மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர் அச்சம் அடைந்துள்ளனர்.