தேனி மாவட்டம், கம்பம் நகரில் இருசக்கர வாகனங்களின் திருட்டு அதிகரித்துள்ளதால், போலீசார் ரோந்து பணியை தீவிர படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வேப்பமரத்திடல் பகுதியில், இரு சக்கர வாகனத்தின் பூட்டை உடைத்து மர்ம நபர் ஒருவர் திருடிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
இரவு நேரங்களில் இரு சக்கர வாகனத் திருட்டு மட்டுமல்லாமல் இதர குற்றச்சம்பவங்களும் அதிகரிப்பதால், போலீஸார் இரவு நேர ரோந்து பணியை தீவிரப் படுத்த வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
















