மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் அருகே உள்ள ஆமருவியப்பன் கோயில் தேரோட்ட விழா கோலாகலமாக நடைபெற்றது.
தேரழந்தூர் கிராமத்தில் செங்கமலவல்லி தாயார் சமேத ஆமருவியப்பன் கோயில் அமைந்துள்ளது.
இந்நிலையில் வைகாசி பெருவிழா பிரம்மோற்சவத்திற்கான கொடியேற்றம் கடந்த 20-ம் தேதி நடைபெற்ற நிலையில் ஒவ்வொரு நாளும் சிறப்புப் பூஜைகள் நடைபெற்றது.
இக்கோயிலில் வைகாசி தேரோட்டத்தை ஒட்டி சுவாமி மற்றும் தாயார் சிறப்பு அலங்காரத்தில் அலங்கரிக்கப்பட்ட தேரில் வலம் வந்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.