புதுச்சேரியில் நண்பனை கொலை செய்த நபரின் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய 2 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
பெரியார் நகர் முருகன் கோயில் வீதியை சேர்ந்த எழில் தனது நண்பர்களுடன் சேர்ந்து முன்விரோதம் காரணமாக ருத்ரேஷ் என்பவரை படுகொலை செய்தார்.
இந்த வழக்கில் கைதான எழில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் எழிலின் வீட்டில் கடந்த 26ஆம் தேதி சிலர் பெட்ரோல் குண்டு வீசினர்.
இது தொடர்பாக காவல்நிலையத்தில் எழிலின் குடும்பத்தினர் புகாரளித்த நிலையில் கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
அப்போது பெட்ரோல் குண்டு வீசியது உயிரிழந்த ருத்ரேஷின் நண்பர்களான சாமுவேல், கணேஷ் ஆகிய இருவர் என்பது தெரியவந்தது.
இதனையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.