ஈரோடு அருகே சித்தோடு ஆவின் நிறுவனம் காலாவதியான பிஸ்கெட் பாக்கெட்டுகளை விற்பனைக்கு அனுப்பியது அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் இதுகுறித்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
சித்தோடு ஆவின் நிர்வாகத்தின் சார்பில் பால் சார்ந்த பிஸ்கெட் உள்ளிட்ட பொருட்கள் தயாரித்து, ஈரோடு உட்பட பல்வேறு மாவட்டங்களில் உள்ள ஆவின் விற்பனை நிலையம் மூலம் விற்பனை செய்யப்படுகிறது.
இந்நிலையில் சித்தோடு ஆவின் நிறுவனத்தில் இருந்து, பிஸ்கட் பாக்கெட்டுகள் கோபிச்செட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி அணையில் உள்ள ஆவின் பாலகத்திற்கு விற்பனைக்காக வேனில் கொண்டு வரப்பட்டன.
இந்த பிஸ்கட்டுகள் காலாவதி ஆகிவிட்டதாக விவசாயி சிவசுப்பிரமணி அளித்த புகாரின் பேரில், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
காலாவதியான பிஸ்கட்டுகள் என்பதை உறுதி செய்த அதிகாரிகள் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்படும் என தெரிவித்தனர்.