கோமா நிலையில் உள்ள கணவரின் சொத்துகளை விற்க மனைவிக்கு அனுமதியளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோமா நிலையில் உள்ள கணவருக்குச் சொந்தமான சொத்துகளுக்கு தன்னை பாதுகாவலராக நியமிக்கக்கோரி, சென்னையைச் சேர்ந்த சசிகலா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி உரிமையியல் நீதிமன்றத்தை அணுகி நிவாரணம் பெற்றுக் கொள்ள உத்தரவிட்டார். இதனை எதிர்த்து சசிகலா தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், பி.பி.பாலாஜி ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்த உத்தரவை வழங்கியது