வங்கதேசத்தில் இருந்து ஊடுருவியர்களுக்கு மத அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்கப்படுவது அரசியலமைப்புக்கு எதிரானது என பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா தெரிவித்துள்ளார்.
மேற்குவங்கம் மாநிலம், கொல்கத்தாவில் ஜெ.பி.நட்டா தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர்,
மேற்குவங்கத்தில் பாஜக 30 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறும் என தெரிவித்தார். மேற்குவங்கத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டுள்ளதாக சாடிய அவர், சந்தோஷ்காலி வழக்கு சிபிஐயிடம் ஒப்படைக்கப்பட்ட பிறகே குற்றவாளி கைது செய்யப்பட்டதுதான் மாநிலத்தின் நிலவும் சட்டம்-ஒழுங்குக்கு சிறந்த உதாரணம் என குறிப்பிட்டார்.