தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் நடிகை அஞ்சலியை தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா தள்ளி விட்ட வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
ஹைதராபாத்தில் கேங்ஸ் ஆப் கோதாவரி என்ற தெலுங்கு திரைப்படத்தின் பிரீ ரிலீஸ் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் நடிகர் பாலகிருஷ்ணா கலந்துகொண்ட போது அவருக்கு காலுக்கு அடியில் மது கலந்த வாட்டர் கேன் ஒன்று இருந்ததாக கூறப்படுகிறது.
மேடையில் நடிகை அஞ்சலியை, பாலகிருஷ்ணா தள்ளி விட்டதாக தெரிகிறது. இந்த வீடியோ சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.