கோவா மாநிலம் உருவான தினத்தையொட்டி அம்மாநில மக்களுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தனது தமிழக ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
இயற்கை அழகு, எழில் கொஞ்சும் கடற்கரைகள், துடிப்பான கலாசாரம், விருந்தோம்பல் மற்றும் அன்புமிக்க மக்களுக்கு பெயர் பெற்ற கோவா பல்வேறு துறைகளில் விரைவான முன்னேற்றத்தை கண்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
வரும் ஆண்டுகளில் கோவா மாநிலம் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்துக்கு புதிய வரையறைகளை தொடர்ந்து அமைக்கட்டும் என ஆர்.என். ரவி தெரிவித்துள்ளார்.