ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில், மூதாட்டிக்கு ஸ்ட்ரெச்சர் வழங்காத விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத்துறை இணை இயக்குநர் அம்பிகா சண்முகம் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, பாதிக்கப்பட்ட மூதாட்டியின் மகளிடமும், மருத்துவமனை ஊழியர்களிடமும், சுகாதாரத்துறை இயக்குநர் விசாரணை மேற்கொண்டார்.
இனி வரும் காலங்களில் இதுபோன்ற பிரச்சனை ஏற்படாத வகையில் செயல்பட ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.