மதுரையில் செல்போனில் பேசியபடி காரை அஜாக்கிராதையாக ஓட்டியதாக யூடியூபர் டிடிஎஃப் வாசன் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் மீது ஜாமினில் வெளிவர முடியாத பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
பிரபல யூடியூபரான டிடிஎஃப் வாசன் மீது பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் நெடுஞ்சாலையில் இரு சக்கர வாகனத்தை இயக்கி விபத்து ஏற்படுத்தியதாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் டிடிஎஃப் வாசன் 10 ஆண்டுகளுக்கு இரு சக்கர வாகனம் ஒட்ட நீதிமன்றம் தடை விதித்தது. இந்நிலையில், காரில் மதுரையிலிருந்து தூத்துக்குடி செல்லும்போது செல்போனில் பேசி கொண்டே ஓட்டுவது போன்ற வீடியோவை, டிடிஎஃப் வாசன் யூடியூபில் பதிவிட்டார்.
இது தொடர்பாக மதுரை மாநகர ஆயுதப்படை சார்பு ஆய்வாளரும், சமூக ஊடகப்பிரிவு கண்காணிப்பு அலுவலருமான மணிபாரதி அளித்த புகாரின் கீழ், டிடிஎஃப் வாசனை அண்ணா நகர் காவல்துறையினர் கைது செய்தனர். அவர் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.