கேரள மாநிலம், மூணாறு அருகே வரிசையாக யானைகள் நடந்து சென்ற வீடியோ வலைதளங்களில் பரவி வருகிறது.
ஆனையிறங்கல் வனப்பகுயில் படகு சேவை நிறுத்தப்பட்டுள்ள நிலையில் நிசப்தமான சூழல் நிலவி வருகிறது.
அங்குள்ள தேசிய நெடுஞ்சாலையில் 7யானைகள் நேர் வரிசையில் ஒய்யாரமாக நடந்து சென்றன.
யானைகளின் நடமாட்டத்தை தொலைவில் இருந்து சுற்றுலாப் பயணிகள் ரசித்தனர்.