பிரதமர் மோடியின் கன்னியாகுமரி வருகையையொட்டி மத்திய பாதுகாப்பு படை அதிகாரிகள் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர் .
பிரதமர் மோடி இன்று மாலை கன்னியாகுமரி வரவுள்ளதால் சுற்றுலா படகு சேவை காலை 10 மணிவரை மட்டுமே இயக்கப்பட்டது.
அவர் தியானம் செய்யும் முக்கடல் சங்கமிக்கும் பகுதியில், 5 அடுக்கு பாதுகாப்புடன் 4000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
விவேகானந்த மண்டபம், திருவள்ளுவர் சிலை, பகவதி அம்மன் கோயில் உள்ளிட்ட பகுதிகள் முழுவதும் மத்திய பாதுகாப்புப் படையினரின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது.
பிரதமரை சந்திக்க யாருக்கும் அனுமதி வழங்கப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.