ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் உண்டியலில் சுமார் 94 லட்சம் ரூபாய் காணிக்கையாக பெறப்பட்டுள்ளது.
திருச்சியில் உள்ள பிரசித்திப் பெற்ற ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் தரிசனம் செய்யும் பக்தர்கள் உண்டியலில் பணம், தங்கம், வெள்ளி உள்ளிட்ட பொருட்களை காணிக்கையாக செலுத்தி செல்கின்றனர்.
இந்நிலையில் பக்தர்கள் செலுத்தியுள்ள காணிக்கையை எண்ணும் பணி கோயில் நிர்வாகம் சார்பில் நடைபெற்றது.
இதில் 93 லட்சத்து 84 ஆயிரத்து 221 ரூபாய் ரொக்கம், 158 கிராம் தங்கம், 602 கிராம் வெள்ளி உள்ளிட்டவை காணிக்கையாக பெறப்பட்டுள்ளதாக கோவில் இணை ஆணையர் மாரியப்பன் தெரிவித்துள்ளார்.