கோவா சர்வதேச விமான நிலையத்தில் மின்னல் தாக்கிய வீடியோ வெளியாகியுள்ளது.
கடந்த 22ஆம் தேதி கோவாவில் இடியுடன் கூடிய கனமழை பெய்த நிலையில், சர்வதேச விமான நிலையத்தில் மின்னல் தாக்கியது.
இதில் விமான நிலையத்தின் ஓடுபாதையில் பொருத்தப்பட்டிருந்த மின் விளக்குகள் சேதமடைந்தன. மின்னல் மற்றும் கனமழை காரணமாக 6 விமானங்கள் திருப்பி விடப்பட்டன.
இந்நிலையில், விமான நிலைய அதிகாரிகள் வெளியிட்டுள்ள மின்னல் தாக்கிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.