கன்னியாகுமரி மாவட்டம், அஞ்சுகிராமம் அருகே பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்ய முயன்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
பால்குளம் பகுதியில் உள்ள விளையாட்டு மைதானத்தில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனையடுத்து அங்கு சென்ற காவல்துறையினர் சுடர், சிவானந்தன் மற்றும் முஜிப்பு ரகுமான் ஆகியோரை 3 பேரை கைது செய்தனர். மாணவர்களுக்கு விற்பனை செய்வதற்காக வைத்திருந்த கஞ்சா பொட்டலத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர். .