ராமநாதபுரத்தில் மதுபோதையில் தகராறில் ஈடுபட்ட தம்பியை கொலை செய்த அண்ணனை போலீசார் கைது செய்தனர்.
தெற்கு காக்கூர் பகுதியை சேர்ந்த சிவா டைல்ஸ் கடையில் வேலை பார்த்து வந்தார். இவர் மதுபோதையில் பெற்றோரிடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டபோது அண்ணன் கார்த்திக் தட்டிக் கேட்டுள்ளார்.
இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த கார்த்திக், சிவாவை அரிவாளால் தாக்கியதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்தில் உயிரிழந்தார். உடலை கைபற்றி போலீசார் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.