சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தில் இந்த மாதத்துடன் 120 ஊழியர்கள் ஓய்வு பெறவுள்ளதால் பேருந்து சேவை பாதிக்கப்படும் என்ற அச்சம் எழுந்துள்ளது.
கடந்த 8 ஆண்டுகளாக புதிய ஓட்டுநர்களோ, நடத்துனர்களோ பணிக்கு சேர்க்கப்படாததால் ஆள் பற்றாக்குறை பிரச்சனை மேலும் தீவிரமடைந்துள்ளது.
ஒவ்வொரு மாதமும், 120 முதல், 150 பணியாளர்கள் ஓய்வு பெறுவதால், பல்வேறு பணிமனைகளில், தினசரி 300 முதல் 500 பேருந்துகள் செயல்படாமல் நிறுத்தப்பட்டுள்ளன.
புதிய ஊழியர்களை நியமிக்க அனுமதி கோரியுள்ளதாகவும், அது அரசின் பரிசீலனையில் இருப்பதாகவும், எம்டிசி ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.