தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் பின்னணி பாடகர்கள் அனுராதா ஸ்ரீராம், தேவன் ஏகாம்பரம் பாடிய பாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இலஞ்சியில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சிக்கு சென்ற இருவரும் பின்னர் குற்றால அருவிக்கு சென்றனர்.
அப்போது இருவரும் இணைந்து குளிச்சா குத்தாலம் பாடலை பாடி அதனை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளனர். அந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் வேகமாக பரவி வருகிறது.