தென்காசி மாவட்டம், கடையநல்லூர் அருகே விளைநிலங்களுக்குள் புகுந்த காட்டு யானை பயிர்களை சேதப்படுத்தியது.
மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய திரிகூடபுரம் பகுதியில் பலா, வாழை உள்ளிட்ட பயிர்களை விவசாயிகள் பயிரிட்டுள்ளனர், இந்நிலையில் விளை நிலங்களுக்குள் புகுந்த ஒற்றை காட்டு யானை பயிர்களை சேதப்படுத்தியது.
இதனால் 50 ஆயிரம் ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும், யானையை வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.