சென்னை வண்ணாரப்பேட்டையில் காலணி கடையில் பெட்ரோல் குண்டு வீசிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
ராயபுரம் எம்.சி ரோட்டில் சாகுல் அமீது என்பவர் சொந்தமாக காலணி கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற மர்ம நபர்கள் கடையின் வெளியே பெட்ரோல் குண்டுவீசி சென்றனர்.
இந்த சம்பவம் வியாபாரிகள் மத்தியில் பெரும் அச்சத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.