புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் உள்ள கோட்டை பைரவர் மற்றும் சத்யகிரீஸ்வரர் கோயிலில் மத்திய உள்துறை துறை அமைச்சர் அமித்ஷா, தனது குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார்.
வாரணாசியில் இருந்து தனி விமான மூலம் திருச்சி விமான நிலையம் வருகை தந்த மத்திய அமைச்சர் அமித் ஷா, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலமாக கானாடுகாத்தானில் உள்ள ஹெலிபேட் தளத்திற்கு சென்றார்.
அங்கிருந்து கார் மூலமாக திருமயத்திற்கு வருகை தந்த அமித் ஷா, முதலில் சத்யகிரீஸ்வரர் ராஜராஜேஸ்வரி கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.
பின்னர், புகழ் பெற்ற கோட்டை பைரவர் கோவிலில் அமித் ஷாவின் பெயர், நட்சத்திரம், மற்றும் குடும்ப உறுப்பினர்கள் பெயருக்கு சிறப்பு அர்ச்சனை செய்யப்பட்டன. பின்னர், சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றது. அமித்ஷாவுடன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும் சாமி தரிசனம் செய்தார்.
இதனை தொடர்ந்து திருச்சி விமான நிலையத்திற்கு சென்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அங்கிருந்து தனி விமானம் மூலமாக திருப்பதி சென்றார்.