டைம் நாளிதழ் வெளியிட்ட உலகின் செல்வாக்கு மிக்க 100 நிறுவனங்களின் பட்டியலில் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் குழுமம், இரண்டாவது முறையாக இடம் பிடித்து அசத்தியுள்ளது.
இதன் மூலம், டைம் இதழ் வெளியிட்ட பட்டியலில் இரண்டு முறை இடம் பெற்ற ஒரே இந்திய நிறுவனம் என்ற பெருமையை ரிலையன்ஸ் குழுமம் பெற்றுள்ளது.
இந்தியாவின் தவிர்க்க முடியாத நிறுவனம் என ரிலையன்ஸ் குழுமத்தை டைம் நிறுவனம் பாராட்டியுள்ளது.
இந்த பட்டியலில், ரிலையன்ஸ் நிறுவனம் தவிர்த்து டாடா குழுமம், சீரம் நிறுவனம் ஆகிய இந்திய நிறுவனங்கள் இடம் பெற்றுள்ளன.