திருநெல்வேலியில் தள்ளுவண்டிக் கடையில் சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டதையடுத்து பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
நெல்லையப்பர் கோயில் அருகில் உள்ள வடக்கு ரத வீதியில் மாரியப்பன் என்பவர் தள்ளு வண்டிக்கடை நடத்தி வந்தார்.
இந்நிலையில் இங்கு கேஸ் சிலிண்டரில் ஏற்பட்ட கசிவின் காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
அப்போது மளமளவென கொளுந்து விட்டு எரிந்த தீயை அணைக்க முயன்றபோது சிலிண்டர் வெடித்துச் சிதறியது.
இவ்விபத்தில் காயமடைந்த தள்ளுவண்டி கடை உரிமையாளர் மாரியப்பன், சிறுவர்கள் உட்பட நால்வர் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.