ராமநாதபுரம் மாவட்டத்தில் 1 மாதத்துக்குள் அனைத்து மருந்தகங்களிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
ராமநாதபுரம் அருகே கடந்த சில தினங்களுக்கு முன்னர் போதை ஊசி செலுத்திய இளைஞர் ஒருவர் பரிதாபமாக பலியானார்.
இதனையடுத்து, மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் விற்கப்படும் மருந்துகள் போதைக்கு பயன்படுத்தப்படுவதாக தொடர் குற்றச்சாட்டு எழுந்தது.
இதையடுத்து, அனைத்து மருந்தகங்களும் 1 மாதத்துக்குள் சிசிடிவி கேமராக்களை பொருத்தாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார்.