பருவ மழையை ஒட்டி தென்காசி மாவட்டம், குற்றால அருவிகளில் சுற்றுலாப்பயணிகளுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
புகழ்பெற்ற சுற்றுலாதலமான குற்றால அருவிகளுக்கு வழக்கத்தை விட முன்னதாகவே நீர்வரத்து வரத்தொடங்கி வெள்ளம் ஏற்பட்ட நிலையில், தற்போது நீர்வரத்து சீராக வந்துக்கொண்டிருக்கிறது.
இந்நிலையில் அருவிகளில் நீர் வரத்து அதிகரிப்பதைக் கண்காணிக்கவும், சுற்றுலாப்பயணிகள் அதிகாரிகளை எளிதில் தொடர்பு கொள்ள வசதியாக வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.